Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முன்னாள் முதலமைச்சரின் நினைவுநாளையொட்டி… பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா… தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!

முன்னாள் முதலமைச்சர் தலைவர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி சி.பி.எஸ்.சி பள்ளியில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள புதுநகரில் டாக்டர் அப்துல்கலாம் சி.பி.எஸ்.சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவுநாளையொட்டி பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றுள்ளது. இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்துள்ளார்.

இதனையடுத்து மொத்தமாக சுமார் 100 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தங்கியுள்ளார். மேலும் அய்லுக் சிட்டி புரொமோட்டர்ஸ் உரிமையாளர் சண்முகம், கீழக்கரை தொழில் அதிபர் இலியாஸ் முகமது, ஐக்கிய ஜமாத் மாவட்ட பொதுசெயலாளர் ஜெயினுல் ஆலம், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

 

Categories

Tech |