கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 5 குழந்தைகளுடன் மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் என்ற பகுதியை சேர்ந்த உமா சாஹு என்ற பெண்மணி தனது 5 குழந்தைகளுடன் இரவு இரயில் தண்டவாள பகுதிகளில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் ரயில் வரும் நேரம் பார்த்து திடீரென்று ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஐந்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்ய தொடங்கினார். அப்போது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.