Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு படையினர் மீது…. திடீர் துப்பாக்கிசூடு…. பரபரப்பு வீடியோ…!!

பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே ராணுவ வீரர்களின் முக்கிய கடமையாகும். அவர்கள் எல்லையில் மிகுந்த கடமையுடன் போராடி வருகின்றனர். சில சமயங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்படுவதும் உண்டு. மேலும் நம்முடைய எல்லைக்குள் தீவிரவாதிகள் புகுந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ இணையத்திலும் வெளியிடப் பட்டுள்ளது. பகத் பர்சுல்லா என்ற இடத்தில் கடைப்பகுதியில் தீவிரவாதி ஒருவர் துப்பாக்கி எடுத்து வந்து பாதுகாப்பு படையினரை சுட்டுவிட்டு தப்பி செல்வது அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |