Categories
தேசிய செய்திகள்

“ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… காவலர் கைது…!!

ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் இருந்து சென்னைக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த 18 வயது இளம் பெண்ணுடன் எல்லை பாதுகாப்பு படை போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை கைது செய்தனர். கேரளாவின் தலச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் புதுவையிலிருந்து கல்லூரியில் சேர்ப்பதற்காக ரயிலில் புறப்பட்டார்.  அதிகாலை அவர் பயணம் செய்த மங்களூரு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.  எஸ்.4 பெட்டியில் நடுவில் உள்ள பெர்த்தில் உறங்கிக் கொண்டிருந்தார் இளம்பெண்.

அந்தப் பெண் அப்போது இளைஞர் ஒருவர் எண்ணை தடவியதாக அந்த பெண் கூச்சலிட்டார். சக பயணிகள் தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரை பிடித்து ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் போலீஸ் என்பதும், கேரளா மாநிலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |