விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள நள்ளி கிராமத்தில் சேர்ந்த சண்முகசுந்தரவள்ளி(56), மாரியம்மாள்(60), தங்கமாரியம்மாள்(45,) கன்னியம்மாள்(45), மாரிகணேஷ்(13), கருப்பசாமி(16) ஆகிய 6 பேர் இணைந்து அதே ஊரில் காட்டு பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென அப்பகுதியில் மழை பெய்து மின்னல் தாக்கியுள்ளது.
அதில் சண்முகசுந்தரவள்ளி, தங்க மாரியம்மாள், மற்றும் சிறுவன் கருப்பசாமி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மற்ற 3 பேர் பலத்தகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்