செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் அடுத்தவர்களிடம் பணத்தை கொடுக்க கூடாது செலவு செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அவ்வாறு கூறுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரு தெய்வங்களுக்கு நம்மக்கு வளத்தை கொடுப்பதோடு நம்முடைய வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதை அறவே தவிர்க்க்க வேண்டும். இருப்பினும் கொடுத்தல் நம்மிடம் இருக்கும் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டுச் சென்று விடும் என்பதும் ஒரு ஐதீகமாகும். சில முக்கியமான செயல்களை தவிர்த்து அந்த கிழமைகளில் பண பெட்டியை திறக்கவே கூடாது என்று கூறப்படுகின்றது.