தொலைக்காட்சி நேரலையில் போது இருந்த முகம் சுளிக்க வைக்கும் பொருளால் அந்த விருந்தினர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
கொரோனா பரவல் காரணமாக இப்போதெல்லாம் விருந்தினர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இன்டர்நெட் மூலமாக பங்கேற்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் வேலையின்மை குறித்து நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட விருந்தினர் வீடியோ கால் மூலமாக நேரலையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வீடியோவில் குறித்து எவட் தன்னுடைய அனுபவங்களை கூறிவந்துள்ளார். அப்போது இந்த நேர்காணலை பார்த்தவர்கள் அவருக்குப் பின்னால் ஒரு பொருள் முகம் சுளிக்கும் படியாக இருந்ததை உணர்ந்துள்ளனர்.
அவருக்கு பின்னால் ஒரு புத்தக அலமாரி இருந்துள்ளது. அதில் புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் செக்ஸ் டாய் ஒன்று இருந்துள்ளது. இந்த வீடியோவை எடுத்த பத்திரிகையாளர் அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இன்றிரவு பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட செய்திகளில் மிகப்பெரிய விருந்தினர் ஒருவர் கலந்து கொண்டார். ஆனால் இனி எப்போதும் ஒளிபரப்பு நிகழ்வதற்கு முன்பு உங்களுடைய அலமாரியை சோதனை செய்து வைத்துக் கொள்ளவும்” என்று அவர் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ஏராளமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. அதில் ஒருவர் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் எந்த வகையை சேர்ந்தவை என்பது எனக்கு இப்போது சந்தேகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இன்னொருவர் இதில் தவறு ஏதும் இல்லை அனைவரும் மறைத்து பேசப்படும் விஷத்தை அவர் மறைக்காமல் சாதாரணமாக வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். எனவே இதுபோன்ற விஷயங்கள் மூலம் பெயர் பாதிக்கப்படாமல் கவனம் செலுத்துவது முக்கியம்.