தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..
கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி ஓனம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் ஓணம் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,
ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துபேசினார். அதில், அன்பு, அமைதி, சகோதரத்துவத்தை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி மத பேதங்களை களைந்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்று வாழ்த்தினார். வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு புதிய ஆடைகள் உடுத்தி ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.