தன் உரிமையாளரை ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டதை அறிந்த வளர்ப்பு நாய் ஒன்று அதன் பின்னாலேயே பல கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் பெண் ஒருவர் செல்லப்பிராணியான நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் , அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது .அப்போது அந்த பெண் வளர்த்த நாய் அவரை சுற்றி சுற்றி வந்துள்ளது.
இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதைக்கண்ட அவருடைய வளர்ப்பு நாய் ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஆஸ்பத்திரிக்கு பல கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்றது . இதையடுத்து நாயின் உரிமையாளர் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரி வாசலிலேயே நாயும் அமர்ந்து கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வளர்ப்பு நாயின் நன்றி உணர்வை காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது .