Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

மாதம் ஒரு முறையாவது…”இந்த குடிநீரை கட்டாயம் சாப்பிடுங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

சளி காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க இந்த மூலிகை குடிநீரை மாதம் ஒரு முறையாவது குடித்தால் நல்லது நடக்கும். நுரையீரலுக்கு மிகவும் நல்லது. இந்த குடிநீரை அனைத்து வயதினரும் குடிக்க முடியும்.

மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் இயல்பாகவே நோய் தொற்றுக்கு முன்பு இந்த குடிநீரை குடிப்பது வழக்கம். அப்படியான மூலிகை குடிநீரை பற்றி இதில் பார்க்கவும்.

தேவையான பொருள்:

தூதுவளைக்கீரை – ஒரு கைப்பிடி
இம்பூறல் – ஒரு கைப்பிடி
ஆடாதோடை இலை – ஒரு கைப்பிடி
சுக்கு – சிறு துண்டு
திப்பிலி – சிறுதுண்டு
பற்பாடகம் – ஒரு கைப்பிடி

சுத்தம் செய்த கீரைகள், சுக்கு, திப்பிலி அனைத்தையும்  நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஒரு மடங்கு ஆகும் வரை கொதிக்க வைத்து இறக்கிய பின்பு அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, காய்ச்சலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் 3 வேளை குடிக்கலாம்.

இவை அனைத்துமே நுரையீரல் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிரானது. காய்ச்சல் போன்றவை இருக்கும் போதுதான் இந்த குடிநீரை குடிக்க வேண்டும் என்பதில்லை. மழைக்காலங்களில் வாரம் ஒரு முறை இதைக் குடித்தால் மற்ற காலங்களில் மாதம் ஒரு முறையாவது இதனை குடிக்க வேண்டும்.

Categories

Tech |