Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்திற்கு ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடுங்க… “பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்”..!!

வல்லாரைக் கீரையில் உள்ள பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

வல்லாரைக்கீரை நரம்புத்தளர்ச்சியை குணமாக்கி மூளைச் சோர்வை நீக்கி, மூளை சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் மங்கலான பார்வையை சரி செய்யும், பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரைக்கீரை சிறப்பான மருந்து. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும். வல்லாரைக் கீரை பொதுவாக இதயத்தை பலப்படுத்த பயன்படுத்தும் ஒரு மருந்து. வல்லாரை இலையை உலர்த்தி நன்கு பொடித்து பாலில் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் எல்லாம் அழிந்துவிடும்.

Categories

Tech |