Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இணையும் பிரபல நடிகை… ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

பிரபல சீரியல் நடிகை மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக நடந்தது முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் முதல் சீசனில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார். இவர்களது ஜோடிக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போதுள்ள சீசனில் ரக்ஷிதா நடித்து வருகிறார். இன்னிலையில் நடிகை ரக்ஷா மீண்டும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இணைய இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகையால் ரசிகர்கள் பலரும் அவர் இந்த சீரியலில் மீண்டும் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்து  கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |