Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒண்டவந்த எடப்பாடி.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்..! கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்..!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து விட்டீர்கள். எந்த மேயரும் கிடையாது, எல்லாத்தையும் தோத்துட்டார். உங்களை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பதவி பதவி என வெறிபிடித்து  அலைகிறீர்கள்.

கட்சியை ஓபிஎஸ் ஐயா கைல கொடுத்துட்டு,  விட்டுட்டு போங்க. ஒண்ட வந்து பிடாரி என்ன பண்ணும் ? ஊர் மக்களை விரட்டும் என்று சொல்வார்களாம். அது போன்று ஒண்ட வந்தது எடப்பாடி. அதனால் எங்களை விரட்டலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறோம். 2500 பேரை வைத்து இந்த கட்சியை அபகரிக்கலாம் என்று பார்த்தீர்கள் என்றால்,

இந்த ஜென்மத்தில் நடக்காது, வெகுவிரைவில் தொண்டர்கள் காலிலே விழுந்து இந்த கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று தொண்டர்கள் சொன்னால்தான் கட்சியில் ஓபிஎஸ் சேர்த்துக் கொள்வார். அது வெகு விரைவில் நடக்கும் நீங்களும் பார்க்க தான் போகிறீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.

Categories

Tech |