ஒன்றிய அரசின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் வருட நல்லாட்சி குறியீட்டை, நல்லாட்சி தினத்தை முன்னிட்டு டெல்லி விஞ்ஞான் பவனில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். நல்லாட்சி குறியீடு விவசாயம், வணிகம், சுகாதாரம், நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட 10 துறைகள் மற்றும் 58 குறிகாட்டிகளை உள்ளடக்கியது ஆகும்.
இவற்றில் நீதித்துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஏ குழுவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் சுகாதாரத்துறையில் தமிழ்நாடு 3-ம் இடம் பிடித்துள்ளது. ஆந்திரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு துறைகளில் முதல் இடம் பெற்றுள்ளது.