வட கொரியாவில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா ஒரு மர்மங்கள் நிறைந்த நாடு. இந்த நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். இவை அனைத்தும் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் என்பவரின் உத்தரவின் பெயரால்தான் நடைபெறும். தற்போது வடகொரியாவில் சூறாவளி மற்றும் கொரோனா பரவல் காரணமாக உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடையின் காரணமாக 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளனர். மேலும் அந்நாட்டில் ஒரு வாழைப்பழத்தின் விலை ரூபாய் 500க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பணமில்லாத காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்நாட்டு மக்கள் உணவு உண்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை முதன்முறையாக அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார்.