Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவர் கூட தப்ப முடியாது….! சாட்டையை சுழற்றும் தமிழக அரசு ….!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது.

5 நாளில் 685 பேருக்கு கொரோனா :

தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 என்ற எண்ணிக்கையில் மட்டும் 685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு மூலம் 119 பேருக்கு கொரோனா :

இன்று கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

பல மாவட்டங்களிலும் தாக்கம் :

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக சென்னை 52 பேரும், அரியலூரில் 22 பேரும், விழுப்புரம் 20 பேரும், கடலூர் 17 பேரும், காஞ்சிபுரம் 7 பேரும், பெரம்பலூர் 1 நபரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்பேடு மூலமாக அதிகமானோருக்கு கொரோனா பரவி வருவது அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Categories

Tech |