Categories
உலக செய்திகள்

“அதிகரித்த HIV பாதிப்பு!”… 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பாதிப்பு… யுனிசெப் வெளியிட்ட அறிக்கை…!!

யூனிசெஃப், 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை எச்ஐவி நோயால் பாதிக்கப்படுவதாக அறிக்கையில்  தெரிவித்திருக்கிறது.

உலக நாடுகள் முழுக்க கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யூனிசெஃப்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, HIV பாதிப்பை தடுப்பதற்கு, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தகுந்த சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, முதியவர்கள், பெண்கள் என்று பலர் எச்ஐவியால் பாதிக்கப்படுவதாக யூனிசெஃப்  தெரிவித்திருக்கிறது. எச்ஐவி நோய் 50 வருடங்களாக நாட்டின் சுகாதாரத்துறைக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, கொரோனா பரவல், சுகாதாரத் துறைக்கு மேலும் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது.

மனநல பாதிப்புகள், வறுமை அதிகரிப்பு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரிப்பது, போன்றவை தான் ஹெச்ஐவி பாதிப்புகளுக்கு காரணமாக அமைகிறது என்று யுனிசெஃப் செயல் இயக்குனரான ஹென்ரிட்டா போரே கூறியிருக்கிறார். கொரோனா பரவலால் குழந்தைகள் அதிகம் எச்ஐவியால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அதனால் உயிரிழக்கும் குழந்தைகளும் அதிகமாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |