மது அருந்துவதற்கு மனைவி காசு தராததினால் ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மதுபானத்தை அருந்துவதற்காக தனது மனைவியிடம் காசு கேட்டு தகராறு செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து தனது மகள் மற்றும் மனைவியிடம் மதுபானம் அருந்துவதற்காக ராமலிங்கம் காசு கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் காசு கொடுக்க மறுத்துவிட்டதால் மனமுடைந்த ராமலிங்கம் விஷம் குடித்து தனது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.