Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு – ஒரே நுழைவுத்தேர்வு – வெளியான அறிவிப்பு…!!

2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆப்பை எடுக்காமல், பொது நுழைவுத் தேர்வை நடத்தி சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வு மூலம் பொதுவான போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும்  பொதுவான திறனாய்வு தேர்வு முறைகளை பரிந்துரை செய்யும் வகையில் 7 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய பல்கலைக்கழகத்திலும் சேருவதற்கு விரும்பும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயமாகும். வரும் 2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த தேர்வு அமல்படுத்தப்படும் என்றும் கரே கூறியுள்ளார்.

Categories

Tech |