பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர்.
பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டம். மத மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும்.யோகாசனத்தை கற்றுத்தர 13 ஆயிரம் பயிற்சியாளர்கள் தயாராக உள்ளதால் விரைவில் நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.