Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் “250.25 கோடி”… வசூல் அள்ளித்தந்த மதுப் பிரியர்கள்…!!

நாடு முழுவதும் நேற்று ஒரு நாளில் 250 கோடிக்கு மேலான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் வார ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் விற்பனை மற்றும் மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், மற்றும் அரசு வாகனங்கள் தவிர வேறு எந்த ஒரு தேவைகளுக்கும் அனுமதி கிடையாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்கு பெரிய சிக்கலாக உள்ளது.

அதனால் நேற்றே அதிகமான மதுபாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் 250. 25 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மட்டும் 50.65 கோடிக்கும் மதுரை மண்டலத்தில் 52.56 கோடிக்கும் திருச்சியில் 51.27 கோடிக்கும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு மிகப்பெரிய வசூலை எட்டியுள்ளது.

Categories

Tech |