தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்க்கை இதுவரை என் தந்தை ( நெல்லை கண்ணன்) என்னிடத்தில் கோவப்பட்டதில்லை. ஒரே ஒரு நாள் நான் என் அப்பாவிடம் கோபப்பட்டேன். மரணத்திற்கு இரண்டு, மூன்று மாதத்திற்கு முன்னாடி. செல்போனில் தொடர்பு கொண்டு வழக்கம் போல சொல்லுங்கள் ஐயா என சொன்னாரு. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன் ? நீங்கள் யார் என்று மதிப்பு தெரியாதவரிடம் நீங்கள் ஏன் கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள் ?
உடனே எனக்கு யார் இருக்கா ? என்று கேட்டார். உடனே நான்.. நாங்கள் எல்லாம் எதற்காக இருக்கிறோம். உங்கள் அருமை நீங்கள் யாரென்று தெரியாதவர்களிடம் நீங்கள் ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டவுடன், தொடர்பை துண்டித்துவிட்டு போனை அணைத்து விட்டார், மீண்டும் தொடர்பு கொண்டேன், அதோட பேசவில்லை.
கடைசியாக மரணச் செய்தி தான். அதை இப்போது நினைத்தால் நான் வருந்துகிறேன். ஆனால் அப்போது எனக்கு அந்த உரிமை இருக்கிறது என் அப்பாவிடம் ( நெல்லை கண்ணன்) கோபித்துக் கொள்வதற்கு…. ஏனென்றால் அவரை அவமதிப்பதை என்னால் தாங்கிக்கவே முடியாது. தமிழ் பேரினத்தின் பெருமைமிக்க தமிழை அவமானப்படுத்துவதாக நான் கருதினேன், என் தகப்பனை அவமானப்படுத்தியதாக நான் கருதவில்லை. என் தாய் தமிழை அவமானப்படுத்தி விட்டதாக நான் கருதுகிறேன். இனி ஒரு மகன் இவரை போன்ற ஒரு தமிழர் உருவாகி வருவதற்கு ரொம்ப கடினம் என நெகிழ்ந்து பேசினார்.