மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, நாளைக்கு கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒருவர் வீட்டில் ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என்று சொன்னால், டெல்லியில் இருந்து NIA வரும். அது யாரு வீட்டுக்குள் போகும் என்று யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. நம்முடைய மாநில முதலமைச்சரிடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, நம்முடைய டிஜிபி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது, காவல்துறை எஸ்பி இடம் கேட்க வேண்டும் என்று அவசியம் கிடையாது.
அங்கு இருக்கின்ற இன்ஸ்பெக்டர் இடம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இருக்காது, அந்த நியா என்கின்ற நாய் நினைத்த யார் வீட்டில் வேண்டுமானாலும் நுழையும், யாரை பிடிப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. நம்ம போலீஸ் பிடித்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் கொண்டு போய் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தவில்லை என்றால் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆகிவிடுவார். நியா ( NIA )வில் ஒருவரை பிடித்தால் கோர்ட்டுக்கே கொண்டு போக வேண்டும் என்று அவசியம் கிடையாது, அவர்களை நீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது,
நீதிமன்றத்திலே நீதிபதிக்கு முன்னால் இவர் மீது இந்த குற்றம் என்று சொல்லவே வேண்டாம். எவ்வளவு காலத்திற்கு, எவ்வளவு காலம் வேண்டுமானாலும்… மைனாரிட்டி மக்களுக்கு மட்டும்தான் ஆபத்தா ? இந்த சட்டம் அப்படி சொல்லவில்லை. யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம், நாளைக்கு ஆட்சி மாறி வந்தால் அமித்ஷாவை கூட பிடிக்கலாம், நாளைக்கு மோடி வீட்டிற்கு போனால் மோடியை கூட பிடித்து இந்த சட்டத்தில் போடலாம்.
ஆளுநர் ஆர்.என் ரவியாவது ஆர்எஸ்எஸ் ஆளு. ஆனால் கேரளாவில் ஒரு கவர்னர் இருக்கிறார், அவர் தேர்ந்தெடுத்த ஒரு இஸ்லாமியர் தான். அவரே என்ன சொல்கிறார் என்றால், நான் ஆர்எஸ்எஸ் தான் என்று சொல்கிறார் இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது என வேதனையை தெரிவித்தார்.