Categories
உலக செய்திகள்

ஒன்னும் ஆகல…! ”இருக்காரு, அப்படியே இருக்காரு”….. கிம் ஜாங் உன் எங்கே ?

வட கொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார்.

கொரோனா வைரசால் உலக நாடுகள் அனைத்தும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை  நடத்தி, அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த கிம் ஜாங் அன், கடந்த சில வாரங்களாகவே எங்கு இருக்கின்றார் என்று தெரியாமல் இருந்து வந்தது.

ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற வட கொரியா நாட்டின் நிறுவியவரும், கிம் ஜாங் உன்னின் தாத்தாவான கிம் சுங் பிறந்த நாள் விழாவிழும் கூட அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்காதது இதனை உறுதி படுத்தியது. இதனால் கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு ? அவர் எங்கே சென்றார் ? உள்ளட்ட பல யூகங்கள் கிளம்பின.

இதையடுத்து அமெரிக்க நாட்டின் உளவுத்துறை, கிம் ஜான் உன் உடல் நிலை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கிம் ஜாங் உன் உடல்நிலை கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும் தெரிவிதத்து. இதனால் உலக நாடுகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தான் அதிபர் கிம் ஜாங் அன் உடல் நிலை மோசமாக இருப்பதாக வெளியாகிய தகவலுக்கு அண்டை நாடான தென்கொரியா மறுப்பு தெரிவித்துள்ளது. தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்துள்ளதாள் உலக நாடுகளிடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்துள்ளது.

Categories

Tech |