பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சென்ற பிப்ரவரி 14 ஆம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் உள்ள பாலகோட்டில் ஜெய்ஷ்- இ -முகமது தீவிரவாத அமைப்பினர் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், தாக்குதல் நடந்த அந்த இடங்களை, பாகிஸ்தான் அதிகாரிகள் பார்வையிட்டதாகவும், அந்த இடத்தில் துளியும் எந்த ஒரு தாக்குதலுமே நடக்காத வண்ணம் அந்த இடத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக நேரில் பார்த்த ஒருவர் கூறி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, அதில் சிலரது சடலங்களை தீயிலிட்டு எரித்ததாகவும், ஆற்றில் தூக்கி வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.