Categories
மாநில செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் அருகே கோவில்பட்டியில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான ஏஞ்சல் என்ற பட்டாசு ஆலை செயல்படுகிறது. கொரோனா ஊரடங்கில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 50% ஊழியர்களுடன் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் மொத்தம் 15 அறைகள் உள்ளது.

இன்று 25 ஊழியர்களுடன் இயங்கி வந்தது. அப்போது வெடி மருந்து கலக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒரு உயிரிழந்துள்ளார். மல்லிஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |