பிரித்தானியாவில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அர்வென் புயலால் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை பயங்கரமாக தாக்கிய அர்வென் புயலால் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மின்சாரம் இல்லாமல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அர்வென் புயல் வடக்கு அயர்லாந்தில் கரையை கடந்த போது மணிக்கு சுமார் 100 மைல் வேகத்தில் பனிப்புயலும் காற்றும் சேர்ந்து வீசியதால் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளது. இந்த நிலையில் காவல்துறையினர் சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.