திருநங்கை மாணவ-மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்கும் ஒரு திருநங்கை, ஒரு திருநம்பி மாணவர்களுக்கு உதவித் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் பயன்பெற திருநங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பின்னர் மாநகராட்சி, நகராட்சி, ஆதரவற்றோர், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து பிளஸ்-டூ வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதனை அடுத்து அரசு கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அதன்பின் தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகின்ற 20.12.2021-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.