வியட்நாமில் சுவற்றில் ஒரு பல்லி பிடிதவறி கீழே விழும்போது மற்றொரு பல்லி அதனை தாங்கிப் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
இவ்வுலகில் தினமும் ஏதாவது ஒரு நாட்டில் எங்கேயாவது ஒரு வினோத நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை காணும் போது நமக்கு வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் வியட்நாமில் டே நின்ஹ் (Tay Ninh) என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ (Gecko) வகைப் பல்லிகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஒரு பல்லி திடீரென தன் நிலை தடுமாறி சுவற்றில் இருந்து கீழே விழுந்தது. இதனைப் பார்த்த அங்கிருந்த மற்றொரு பல்லி உடனே அதனை தனது வாயால் கவ்வி இழுத்து தன்னுடன் அழைத்துச் செல்ல முயற்சி செய்தது.
இந்த இரு பல்லிகளின் எடையும் சரி சமமாக இருந்ததால் நீண்ட நேரமாக காப்பாற்றும் முயற்சி நீடித்தது. இறுதியில் தன்னம்பிக்கையுடன் போராடி தனது நண்பனை அந்தப் பல்லி காப்பாற்றியது. இந்த வினோத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.