Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன் மேன் ஆர்மி தான் எங்கள் புலிப்படை…. மாஸ் ஸ்பீச் கொடுத்த கருணாஸ் …!!

ஒரு நபராக இருந்தாலும் கூட கடைசி வரை முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க போராடுவோம் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது,  முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய அடிப்படையான உரிமைகளும், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக் கூடிய இந்திய சுதந்திரத்திற்காக மலைக்கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனத்தை செய்து, 16 ஆண்டு காலங்கள் ஆயுதங்களை தாங்கி  போராடிய மாமன்னர் மருது பாண்டியர்களுடைய திருவுருவச் சிலையை பாராளுமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், மதுரை விமான நிலையத்திற்கு தெய்வத்திருமகன் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உடைய பெயரை சூட்ட வேண்டும் .

1994திலே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நந்தனத்தில் தெய்வ திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையை திறந்து அன்றைக்கு அரசு ஆணை, அதாவது கள்ளர், மரவர், அகமுடையர், தேவர் இனம் என்று அறிவித்து வெளியிட்ட அந்த அரசு ஆணையை இந்த அரசாங்கம் மத்திய மாநில அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தி வன்னியர் சங்கத்திற்கு வழங்கப்பட்டு இருக்க கூடிய அந்த ஊழிய இட ஒதுக்கீடை நான் சார்ந்த என்னுடைய முக்குலத்தோர் சமுதாயத்திற்கும் வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே என்னுடைய சமுதாயம் எதிர்காலத்தில் கல்வியாளர்கள் ஆகவும்,  அரசுப் பணிகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேற கூடிய ஒரு சமுதாயமாக உருவாக வேண்டும். இதுபோன்ற எங்களுடைய பிரதான கோரிக்கைகளை மத்திய மாநில அரசு இடத்திலே வலியுறுத்தி இருக்கிறோம்.

அந்த அடிப்படையிலே பாரத பிரதமர் அவர்கள் முக்குலத்தோர் புலிப்படையை அழைத்து, அது சார்ந்த நிர்வாகிளை  அழைத்து பேச வேண்டும். எங்களுடைய முன்வைப்பதாக தான் நாங்கள் சொல்லி இருக்கிறோமே தவிர… எந்த ஒரு காலகட்டத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது, எந்த ஒரு அரசியல் அமைப்போடும் சேர்த்துக் கொள்ளப்படாது. முழுக்க முழுக்க கடைசி வரை தனி ஒரு நபராக இருந்தாலும் கூட கடைசி வரை நான் சார்ந்த இந்த முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க முக்குலத்தோர் புலிப்படை இறுதிவரை போராடும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.

Categories

Tech |