லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம் “மாஸ்டர்”. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், படத்தின் பாடல்கள் அவரது, ரசிகர்கள் மட்டுமின்றி, பலரையும் ஈர்த்து வருகிறது.
விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் லலித் வெளியிடுகிறார். இப்படத்தின் டீசர் தீபாவளி தினத்தில் மாலை 6 மணிக்கு வெளியானது. நீண்ட நாட்களாக ‘மாஸ்டர்’ அப்டேட் கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த டீஸர் கொண்டாட்டமாக இருந்தது.
யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீஸர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், 2.3 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது வரை ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் 38 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்தியாவில் வெளியான படத்தின் டீஸர்களில் அதிக லைக்குகளை பெற்ற டீஸர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. அதுவும் டீஸர் வெளியான ஒரு நாளுக்குள்ளேயே இந்த சாதனையை நிகழ்த்தி வரும் நாட்களில் இன்னும் அதிகமான சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
அதே போல மாஸ்டர் படத்தின் அடுத்த சாதனையாக கடந்த மார்ச் மாதம் வெளியான “வாத்தி கம்மிங்” தற்போது வரை 90 மில்லியன் பார்வைகளை தாண்டி தொடர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.