Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா… 42 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. த

அதில், சென்னை மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் 25 வயது ஆண் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ல் இருந்து 42 ஆக அதிகரித்துள்ளது

Categories

Tech |