Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர்.

மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் 3 வீரர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. அதில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களை சிஆர்பிஎப் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

பீகார் மாநிலம் வைசாலியைச் சேர்ந்த 42 வயதான ராஜீவ் சர்மா, மகாராஷ்டிராவின் புல்தானைச் சேர்ந்த சிபி பகரே (38) மற்றும் குஜராத்தின் சபர்காந்தாவைச் சேர்ந்த பர்மர் ஸ்டயபால் சிங் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது, சோர்பூர் பகுதியில் தாக்குதல் நடைபெறும் இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |