Categories
மாநில செய்திகள்

“பாஜக தூய்மையான தமிழ்நாட்டை அமைக்கும்”…. பாஜகவில் இணைந்த பிரபல நடிகர்…!!

திரையுலக நடிகரும் இயக்குனருமான தருண் கோபி எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக  சார்பில் “விநாயகரும் விருட்சமும்” என்ற தலைப்பில்  விநாயகருக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் கலந்துகொண்டு, கொரோனா பாதுகாப்புப் பணியில் சிறப்பாக செயலாற்றி வரும் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதங்களில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அவர்களுக்கு  விநாயகர் சிலைகளை வழங்கி சிறப்பித்தார். அவருடன் பாஜக அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவரான அர்ஜுன மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து மற்றொரு நிகழ்வில் திரைப்பட நடிகரும் இயக்குநருமான தருண்கோபி பாஜகவில் இணைந்து, செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜக ஆட்சியில் நாடு சிறப்பாக உள்ளது. தற்போது பாஜக தலைமையில் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்துவருகிறார். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சியை பாஜக அமைக்கும் என நம்புகிறேன்” என கூறினார். மேலும் இந்த தருண்கோபி காளை, திமிரு போன்ற படங்களை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |