சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் உஷாராணி தேர்வுத்துறை அலுவலகத்தை உடனடியாக மாற்றினார். தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஒரு டி.எஸ்.பி., ஒரு காவல் ஆய்வாளர், ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 20 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.