சீட்டு கம்பெனியில் போட்ட சீட்டு பணத்தையும், செக்யூரிட்டிகாக கொடுத்த சொத்து பாகப்பிரிவினை பத்திரத்தையும் திருப்பி தராமல் கேட்கப் போனாள் மிரட்டுவதாக ஒருவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இம்மாவட்டத்தில் சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த சீட்டு கம்பெனியில் இம்மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பலரும் சீட்டு செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து பெரிய காஞ்சிபுரம் ராயன் குட்டை பள்ளத்தெருவில் வசிக்கும் டிராவல்ஸ் உரிமையாளர் சேகர் தன்னுடைய 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்த மற்றும் 38,35,000 ரூபாயை சீனிவாசன் உட்பட 4 பேர் ஆக்கிரமித்துக் கொண்டதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில் சீனிவாசனிடம் 2019 ஆம் வருடம் ஒரு கோடியில் 2 சீட்டும், 50 லட்சம், 25 லட்சம் 10 லட்சம் 3 லட்சம் போன்ற பிரிவுகளில் தலா ஒரு சீட்டும் செலுத்தி வந்தேன் என அவர் கூறியுள்ளார். அதன் பின் அதற்கான செக்யூரிட்டியாக களியனூரில் உள்ள 5 சொத்துக்கள் பாகப்பிரிவினை பத்திரம் என 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சீட்டு நிறுவனத்தில் உள்ள ஒரு இயக்குனரான கார்த்திக் என்பவரிடம் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார். பின்னர் 1 கோடி மதிப்புடைய சீட்டை எடுக்க அனுமதித்துள்ளனர். ஆனால் நான் செலுத்தி வந்த மற்ற சீட்டுகளை திடீரென ரத்து செய்யப்பட்டதால் சீட்டுகளில் செலுத்தியிருந்த 38, 35,000 ரூபாய்யை கையில் தரவில்லை என அவர் கூறியுள்ளார்.
அதன்பின் நான் எழுதிக்கொடுத்த 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எனது தந்தையிடம் தராமல் எனக்கு தெரியாமல் சீனிவாசனின் மகன் நாராயணப் பெருமாளுக்கு கிரயம் செய்து கொடுத்திருப்பதாக அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து என்னுடைய 38, 35,000 மாற்றும் 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்துக் கொண்டு இருப்பதாகவும் திருப்பி கேட்டால் மிரட்டுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இம்மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ், சரவண பெருமாள், கார்த்திக் மற்றும் சீனிவாசன் ஆகியோரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.