உலகில் பெரும்பாலான காடுகளில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ தீ விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிம்மா என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கொழுந்து விட்டு எரியும் நெருப்புக்கிடையே நாய்க்குட்டிகள் முனங்கும் சப்தம் கேட்டது. சத்தம் கேட்டதையடுத்து உடனே பாதுகாப்பு உடைகள் ஏதும் அணியாத நிலையில் தீயில் மாட்டிக்கொண்ட இரு நாய்க் குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை பற்றி கவலை கொள்ளாமல் பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இந்த செயலை கண்டு பொது மக்கள் அனைவரும் பாராட்டினார்.