Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தவறி விட்டுப்போன பணம்… வாலிபரின் செயல்… பாராட்டிய காவல்துறை அதிகாரிகள்…!!

ஏ.டி.எமில் ஒருவர் வீட்டு போன பணத்தை வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நரியந்தல் கிராமத்தில் முரளிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருக்கோவிலூர் மசூதி தெருவில் அமைந்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது முரளிகுமார் ஏ.டி.எம் கார்டு இயந்திரத்தில் சொருகி ரகசிய என்னையும் மற்றும் தேவையான தொகையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நெடுநேரமாகியும் பணம் வரவில்லை என்பதனால் இயந்திரத்தில் பணம் இல்லை என்று நினைத்து முரளிகுமார் கார்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் சென்ற சில மணி நேரத்திலேயே திருக்கோவிலூர் பகுதியில் கால்நடை மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பாடியந்தல் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தசாமி மகன் முருகன் அங்கு பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் இயந்திரத்தில் 9,000 ரூபாய் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் யாரோ பணத்தை தவறி விட்டு சென்றிருக்கிறார்கள் என அறிந்து முருகன் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து 9,000 ரூபாய்யை எடுத்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்தது பற்றி தெளிவாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் உதவியுடன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்தப் பணத்துக்கு சொந்தக்காரர் பேருந்து ஓட்டுநர் முரளிகுமார் என்பது தெரியவந்துள்ளது. பிறகு அவரை நேரில் வரவழைத்து 9,000 ரூபாய் பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் அவரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் இச்சம்பவத்தால் கால்நடை மருத்துவமனை ஊழியர் முருகனின் நேர்மையை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |