Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 8 வருடங்கள்… டிமிக்கி கொடுத்த குற்றவாளி… காவல்துறையினரின் தீவிர செயல்…!!

தொடர்ந்து 8 வருடங்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சில பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருக்கோவிலூர் அருகில் மாமுண்டி கூட்டு ரோட்டில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் வடகரைதாழனூர் பகுதியில் வசிக்கும் காமராஜ் என்பதும் இவர் இரண்டு பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் அதில் கிடைக்கும் பணம், நகைகள் மூலமாக ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்த 250 கிராம் வெள்ளி பொருட்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள், 25 பவுன் தங்க நகை, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |