Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதுக்கு கூட ஆர்டர் பண்ணுவாங்களா… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‌ கண்டாச்சிபுரம் பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு கையில் பையுடன் வந்து கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர் கண்டத்தை பகுதியில் வசிக்கும் சங்கர் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை ஊற்றி வைத்து இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையின் போது அவர் ஆர்டரின் அடிப்படையில் குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி அதனை வீடுகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. அதனால் சட்டவிரோதமாக தண்ணீர் பாட்டிலில் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |