ஜப்பான் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க கல்லறை பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒசாக்கா நகரில் உள்ள உமேடா கல்லறை வரலாற்று சிறப்பு மிக்க கல்லறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கல்லறை அமைந்துள்ள இடத்தில் 1500-க்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டின் மேற்கு நகரமான ஒசாக்காவில் அகழாய்வு பணியின் போது ஒரே இடத்தில் இத்தனை எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கிடைக்கப்பட்ட எலும்புக்கூடுகளை ஆராய்ச்சி செய்து பார்த்த பொழுது அந்த எலும்புக்கூடுகள் பெரும்பாலும் 30 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் குழந்தைகளாகவும் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த எலும்புக்கூடுகள் கொரோனா போன்ற கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களாக கூட இருக்கலாம் எனவும், அந்த எலும்புக் கூடுகளின் கைகள் கால்களில் தொற்றுக்கான அறிகுறி இருந்ததாகவும் நிபுணர்கள் மூலம் கூறப்படுகிறது.