பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஓரிரு மாடல் டிவிகளை அறிமுகப்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஒன் பிளஸ் 50 Y1S பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது.
இந்த ஸ்மார்ட் டிவியில் 4k திரை, MEMC தொழில்நுட்பம் மற்றும் ALLM இருக்கிறது. இந்நிலையில் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா என்பவர் 55 இன்ச் எல்இடி டிவியை இந்தியாவில் அறிமுகப் படுத்து வதற்கான வேலையில் oneplus நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன் பிறகு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட் டிவியில், 4k திரை, MEMC, டால்பி ஆடியோ, UHD டிஸ்ப்ளே, HDR 10, HDR 10+, HLG, 3 × HDMI 2.1 (1xeARC), 2 × USB 2.0, optical, either net, dual band, Wi-Fi, Bluetooth 5.0 போன்ற சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதன் பிறகு ஹார்ட்வேரில் 2 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம், இன்டென்ஸ் ஸ்டோரேஜ், அலெக்சா, குரோம் ஸ்காட், கூகுள் அசிஸ்டன்ட் போன்றவைகள் இருக்கிறது. மேலும் இந்த டிவியை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.