ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும்.
இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தூத்துக்குடி, நெல்லையில் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.