Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. “1 ரூபாய் தான்”…. சேர்க்கை கட்டணம் நிர்ணயித்த கல்லூரி…!!

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்காக ஒரு ரூபாய் கட்டணம்  நிர்ணயித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் குணமடைந்து வீடு திரும்புவாரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை போடப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ரிசி பங்கிம் சந்திர கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியில் அனைத்து பாடப் பிரிவுகளை சேர்த்து மொத்தம் 2,400 இடங்கள் மட்டுமே உள்ளன. இது குறித்து அக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் சஞ்சீவ் சகா ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில், “ஆன்லைன் படிவங்களுக்கான கட்டணம் வழக்கம்போல் 60 ரூபாய் ஆக இருக்கும். இருந்தும் அனைத்து பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை கட்டணம் 1 ரூபாய் மட்டும் தான். நுழைவு கட்டணம் ஒரு ரூபாய் என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தற்கு காரணம், இந்த கொரோனா கால கட்டத்தில் மக்களின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |