மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் ஒன்று காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
தற்போது விஜய் கதாநாயகனாகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வெளிவர இருக்கும் படம் மாஸ்டர். மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில் காதலர் தினத்தன்று மாஸ்டர் திரைப்படத்தின் டிராக் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு குட்டி கதை சொல்லும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய். இப்பொழுது ஒரு குட்டி கதை என்ற பாடலை படத்தில் வைத்ததோடு அதனை காதலர் தினத்தன்று வெளியிடுவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாக நிலையில் உள்ளனர்.