தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதனால் மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவை இருக்காது என்று பலரும் சொல்வார்கள். ஆப்பிளில் நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதோடு கலோரி ஆப்பிளில் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைப்பதற்கும் அது உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெறும் ஆப்பிளை சாப்பிடுவதைக் காட்டிலும் ஆப்பிள் டீ குடிப்பது மிகவும் நல்லது.
தேவையானபொருட்கள்
- ஆப்பிள் – 2
- டீ பேக் – 1
- இஞ்சி – சிறிய துண்டு
- எலுமிச்சைச் சாறு – 8 ஸ்பூன்
- தேன் – தேவைக்கேற்ப
- மிளகு – 4 ஸ்பூன்
செய்முறை
முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மிளகு, எலுமிச்சை சாறு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஒரு கப் அளவுக்கு தண்ணீர் வற்றும் வரை கொதிக்கவிடவும்.
அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி ஆப்பிளை துருவிப் போட்டு தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதோடு ஒரு டீபேக் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து குடிக்கலாம்.
இயற்கையாகவே ஆப்பிள்களில் வைட்டமின் சி சத்து இருக்கின்றது. இது உடலில் நோய் ஏற்படாமல் தடுக்க உதவி புரிகிறது. தற்போதைய காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை எதிர்த்து போராட முடியும். தினமும் ஆப்பிள் டீ குடிப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும்.