மும்பை தாராவி பகுதியில் இன்று புதிதாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி மக்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. கொரோனா முதல் அலையின் போது மாநில அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாக தொற்று அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இரண்டாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கியபோது மீண்டும் அங்கு தொற்று மின்னல் வேகத்தில் பரவ ஆரம்பித்தது.
பின்னர் மீண்டும் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கண்காணிக்க ஆரம்பித்தது. இதனால் அங்கு படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்தது. கடந்த மே 26-ஆம் தேதிக்கு பிறகு தாராவியில் ஒற்றை இலக்க எண்களில் பாதிப்பு பதிவாக தொடங்கியது. தற்போது இன்று தாராவி பகுதியில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை மேலும் அங்கு சிகிச்சை பெற்று அவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.