விநாயகர் சிலைகளை அகற்றக் கோரி காவல்தறையினர் கண்டித்த போது அரசுக்கு நல்ல புத்தியை கொடு விநாயகா என்று ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் வேண்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக மாநில பொறுப்பாளரானவர் ராஜகோபாலன். இவர் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டருகே சிறிய அளவிலான விநாயகர் சிலை ஒன்றை வழிபாட்டுக்காக வைத்திருந்தார்.இது பற்றி தகவலறிந்த விழுப்புரம் நகர காவல் துறையினர் உடனடியாக அங்கு வந்து விநாயகர் சிலையை அகற்ற கூறி அறிவுறுத்தினர்.
இதனால் காவல் துறையினருக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர், ‘இந்துக்கள் பண்டிகைக்கு தடை விதிக்கும் அரசுக்கும், காவல்துறை அலுவலர்களுக்கும் நல்ல புத்தியை கொடு விநாயகா” என வேண்டினார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.