ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசிடம் இருந்தோ, டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்படும் நிலையில், தற்போதும் ஆங்கிலேய ஆட்சியில் காலத்திலிருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது என கூறிய நீதிபதி,
இது சம்மந்தமான வழக்கில், உள்துறை தலைமைச் செயலாளர் ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மாவட்ட எஸ்பிக்களுக்கு முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இவ்வாறு செயல்படுத்தாத எஸ்பிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிடப்படும் என்றும் ஒரு எச்சரிக்கையை நீதிபதி விடுத்திருக்கின்றார்கள்.