ஒரு வருட காதலுக்கு பின் தொடர்பை துண்டித்து வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால் பெண்ணை எரித்துக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்த சினேகாவும் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சினேகலதாவிற்கு தர்மபுரத்தில் எஸ்பிஐ வங்கியில் இரண்டு வாரத்திற்கு முன்பு வேலை கிடைத்துள்ளது. வேலைக்கு போன பின் ராஜேஷுடன் சினேகா பேசுவது குறைந்து போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சினேகா இரண்டு நாட்களுக்கு மேலாக வீட்டுக்கு வராததால் கவலை அடைந்த பெற்றோர் பல இடங்களில் மகளை தேடி வந்தனர்.
பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் சினேகாவை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது ஒரு புதருக்குள் ஒரு சடலம் எரிந்த நிலையில் இருந்ததாக தகவல் கிடைத்தது. எரிக்கப்பட்ட நிலையில் இருந்த சடலத்தைப் சினேகா என்பதை உறுதி செய்த காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். சினேகாவின் காதலன் ராஜேஷ் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் மேலும் ஒரு வருடமாக காதலித்து வந்த சினேகா தன்னை விட்டு பிரவீன் என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் எனவும் கூறியுள்ளார். அதன் காரணமாகவே ராஜேஷுக்கும்,சினேகாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு கட்டத்தில் கொலை செய்ய முடிவு செய்து அவரை எரித்ததாக ராஜேஷ் காவல்துறையிடம் கூறினார்.